#Breaking || விவசாயிகளுக்கு 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பன்னீர்செல்வம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று காலை பத்து மணிக்கு சட்டசபைக்கு கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான உரையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார்.

அதில் விவசாயிகளுக்காக பல முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் விவசாயிகள் நல்ல முறையில் சாகுபடி செய்வதற்காக 1.5 லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்வில் ஒளி வர இந்தாண்டும் இதேபோல் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN budget one lakhs Electrical connections provided mrk panneer selvam submit


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->