#TNBUDGET2023 : மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்..  பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்து வருகிறார். இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6.8 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1000 ரூபாயில் இருந்து, 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், கடுமையான பாதிப்பு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை 1,500 ரூபாயில் இருந்து 2000ஆக  உயர்த்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்காக ரூ.1443 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Budget 2023 Increase in monthly pension for physical challengers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->