கையேந்தி நின்ற தமிழன்! அய்யோ.. என்ன ஆக போகிறதோ தமிழ்நாடு! கும்பகோணத்தில் நடந்த கொடுமை!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் நடத்திய ஆர்பாட்டத்தில், மது பெரியார் ஒருவர் மதுவுக்காக கையேந்தி நின்ற அவல காட்சி அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே பல கோடி பேர் மதுவுக்கு அடிமையானதாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு பிறகு, விசிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிற்கு கிட்டத்தட்ட வந்து விட்டன. 

அதே சமயத்தில் ஆளுகின்ற திமுக, முன்னதாக ஆட்சி செய்த அதிமுக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர உடன்படவில்லை என்பதும் தெரிந்து தெரியவந்துள்ளது.

இதற்கிடையே நேற்று தமிழகம் முழுவதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையம் சாலைப் பகுதியில் அரசு டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கிய பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் மது பாட்டிலில் உள்ள மதுவை கீழே சாலையில் கொட்டி திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். 

அப்போது அருகே இருந்த வயதான மதுப்பிரியர் ஒருவர், பாஜகவினர் கீழே கொட்டும் மதுவை கையில் பிடித்து, கீழே கொட்டாதீர்கள், எனக்கு கொடுங்கள், நான் அருந்திவிட்டு செல்கிறேன் என்று போராடிய அவல காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி, தமிழகத்தில் மது போதைக்கு அடிமையானவர்களின் நிலை என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது..

இப்படியே போனால் மதுவுக்கு அடிமையானவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ? எதையெல்லாம் செய்ய துணிவார்களோ என்ற அச்சம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Protest in kumbakonam


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->