பொள்ளாச்சி வழக்கு: நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும் நன்றி - நயினார் நாகேந்திரன்.!!
tn bjp leader nainar nagendran speech about pollachi harassment case
பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டுகளாக விசாரித்து வந்த நிலையில், இன்று 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கபட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது:- "பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.

பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றம் செய்ய முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இந்தத்தீர்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tn bjp leader nainar nagendran speech about pollachi harassment case