தமிழக முதல்வரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த டி.என்.51 புள்ளிங்கோ.. அண்ணாத்தைக்கு ஜே... மாஸ் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்டத்திற்கு சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்திருந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 

இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்ற முதல்வர், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவில் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த தமிழக முதல்வர், மக்களுக்கு வணக்கம் செலுத்தியவாறே வந்துகொண்டு இருந்தார். இதன்போது, அரியர் பாய்ஸ் செய்த அலப்பறைகள் பெரும் வைராகியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நேற்று முன்தினம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, அரியருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்தியிருந்தால் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அரியர் வைத்திருந்த பல பட்டதாரி சிங்கங்கள் பலே உற்சாகத்திற்கு உள்ளாகி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் சாலையில் போஸ்டரும் ஒட்டப்பட்டது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர், முதல்வருக்காக காத்திருந்து, அரியரில் தேர்ச்சி பெற வைத்ததற்கு நன்றி என்று கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN 51 Nagapattinam pullingow thanks to Tamilnadu CM Cancel Arrears Exam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->