சார்ஜ் போட்டுக்கொண்டே தந்தையுடன் வீடியோ கால்.. பெண்ணிற்கு அரங்கேறிய சோகம்.. கவனமாக இருங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியை சார்ந்தவர் சுகுமார். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவரது மகளின் பெயர் ஆர்த்தி (வயது 18). இவர் தனது தந்தையுடன் வீடியோ கால் மூலமாக தினமும் பேசுவது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல ஆர்த்தி தனது தந்தையுடன் வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்த நிலையில், செல்போன் திடீரென வெடித்து சித்தரித்துள்ளது. இதில் உடைந்த செல்போன் பாகங்கள் ஆர்த்தியின் கண்களில் புகுந்துள்ளது, மேலும் சில பாகங்கள் காதிற்குள் சென்றுள்ளது. 

இதனால் ஆர்த்தி அலறிய நிலையில், குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், இவர் அலைபேசியில் சார்ஜ் போட்டுகொண்டு பேசிய காரணத்தால் அலைபேசி வெடித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், வெடி சப்தம் காரின் டயர் வெடிப்பது போல கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvarur girl lost eyes using charge mobile to speak video call with dad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal