மேக்கப்பை நம்பி மோசம் போன வாலிபர்.. தூக்கில் தொங்கிய பகீர் பின்னணி.. யோ யோவால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


யோ யோ செயலி மூலம் அறிமுகமான பெண்ணின் பின்புலம் தெரியாமல், அவரது வீட்டிற்குச் சென்ற இளைஞர் மன விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்ரின். இவரது கணவர் அஜீஸ். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், யோ யோ என்ற செயலி மூலமாக சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் அம்ரினுடன் பழகியுள்ளார். 

இவர்கள் இருவரும் பழகி வந்த நிலையில், பூபதி தனியார் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அம்ரினுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும், தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும் தெரிவித்து பழகி வந்துள்ளார். 

இருவரும், கடந்த 7 மாதமாக யோ யோ செயலி மூலமாக பேசி வந்த நிலையில், அம்ரினை பார்க்க வாலிபர் திருவண்ணாமலை புறப்பட்டுள்ளார். மேலும், தனது வீட்டிற்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியும் வாங்கிச் சென்ற நிலையில், அம்ரின் வீட்டில் இல்லாத போது அவரது குழந்தைகள் இருந்துள்ளது. 

குழந்தைகளிடம் நீங்கள் யார் என்று கேட்டபோது, அப்போது தான் அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மனவேதனை அடைந்த பூபதியை அம்ரின் தனது வீட்டிலேயே இரண்டு நாட்கள் கள்ளக்காதலனை தங்க வைத்து சமாதானம் செய்துள்ளார். 

இவரின் சமாதானம் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த பூபதி, அம்ரின் கடைக்குச் சென்ற பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த அம்ரின் கள்ளக்காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து, புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் பூபதியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், பூபதி எடுத்து வந்த மஞ்சள் தாலி மற்றும் செல்போனை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai Chengam Affair Youngster Suicide at Affair Woman House


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->