ஆரணியில் தொடரும் சோதனை.. தினமும் ரெய்டு நடத்தும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


ஆரணியில் உள்ள அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் அசைவ உணவகத்தில் உணவுப்பாதுப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் செயல்பட்டு வந்த 7 ஸ்டார் ரெஸ்டாரன்ட் உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி மோனிகா பரிதாபமாக பலியாகினார். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவுப்பாதுகாப்புத்துறையினர் சோதனையில் கெட்டுப்போன இறைச்சி உயிரிழப்புக்கு காரணம் என உறுதியானது.

இதனையடுத்து, கடையின் உரிமையாளரான காதர் பாஷா மற்றும் சமையலர் முனியாண்டி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து இருந்தனர். மேலும், ஆரணி சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு உணவகத்தில், உணவுப்பாதுகாப்புத்துறை சார்பாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆரணியில் கடந்த 4 நாட்களாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சைவ மற்றும் அசைவ உணவகங்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக பல்வேறு உணவகத்தில் நடைபெற்ற சோதனையில், மொத்தமாக 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே அழிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப்போன இறைச்சியை வியாபாரத்திற்கு தயாராக வைத்திருந்ததாக 18 உணவகத்தின் உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இன்று ஆரணி அண்ணாசாலை பகுதியில் செயல்பட்டு வரும் அசைவ உணவகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani Hotel Raided by Food Safety Department Officers Today 4 Days Continuous Process


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal