மதுபானக்கடையை மூடக்கூறி போராட்டம்.. திருப்பூர் பாமக அரசுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை.!
Tiruppur PMK Warn Close Tasmac On College Road Area
அரசு மதுபான கடையை மூடாத பட்சத்தில், நாங்களே முன்வந்து மூடிவிடுவோம் என திருப்பூர் பா.ம.க எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகே குடியிருப்புகள், கல்லூரி மற்றும் பள்ளி, கோவில் போன்றவை உள்ளன. குடிகார கொடூரர்கள் மதுபானத்தை அருந்திவிட்டு வீதிகளில் தூங்குவது போன்ற செயல்களை செய்து வந்துள்ளனர்.
இதனால் பெண்கள் நிம்மதியாக வீதியில் நடக்க இயலாத சூழல் எழவே, அரசு மதுபானக்கடையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், மதுபானக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அரசு மதுபான கடைகளை மூட மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், நாங்கள் முன்வந்து மூடும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து கோஷமிட்டனர். இந்த கூட்டத்திற்கு பா.ம.க மாநில துணைப்பொதுச்செயலாளர் இரமேஷ் தலைமை தாங்கினார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன், தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
"மதுபான பழக்கம் உடல் நலத்திற்கும், குடும்ப நலத்திற்கும் கேடு., உயிரை பறிக்கும்"..
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur PMK Warn Close Tasmac On College Road Area