"ரோட்ட போடச் சொன்னா கேட்டை போட்டு வைத்த"நெல்லை நெடுஞ்சாலை துறையின் புதிய வடிகால் அமைப்பு - Seithipunal
Seithipunal


நெல்லையில் வீடு மற்றும் கடைகளின் கதவுகளை மறைத்தபடி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெடுஞ்சாலை துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் தான் இப்படி பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி அமைக்கப்பட்டு இருக்கின்றன.

திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்ட கழிவுநீர்  கால்வாய்கள் தான் இவ்வாறு பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலி நெடுஞ்சாலை துறை சார்பாக திருநெல்வேலி டவுனிலிருந்து தென்காசி செல்லும் சாலையில்  புதியதாக வடிகால் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2.3 கிலோமீட்டர் அளவிற்கு சாணக்கல் அமைக்கப்பட்டு அவற்றுடன் சேர்ந்து வடிகால்களும் அமைக்கப்பட்டன. வர வைக்கப்பட்ட வடிகால்கள் தான் சாலையிலிருந்து மூன்றடி உயரமுள்ள அளவிற்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றால் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக வெளிப்புறமாக கதவுகள் திறக்கும் அமைப்பில் இருக்கும்  வீடுகளில் உள்ள மக்கள் தங்களது வீட்டின் கதவுகளை திறப்பதில் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirunlveli town people facing troubles because of three feet drainage in construction


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->