ஜே.இ.இ. முதன்மை தேர்வு: முதலிடம் பிடித்த நெல்லை மாணவர்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ முதன்மை தேர்வு கடந்த மாதம் தொடங்கியது. 

நாடு முழுவதும் 290 நகரங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். ஆங்கில மொழிகளில் தேர்வு எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் முதன்மை தேர்வு முடிவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

இதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 11 லட்சம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில் 23 மாணவர்கள் 300க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

மேலும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli student JEE topper


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->