2 பொண்டாட்டிக்கு தெரியாமல் 2 காதலி.. இறுதியில் பள்ளி மாணவி.! பண்ணையில் பணி செய்தவனை தூக்கிய போலீஸ்.! - Seithipunal
Seithipunal


பணகுடி அருகே இரண்டு மனைவிகளை திருமணம் முடித்த கொடூரன் ஒருவன், இரண்டாவதாக இரண்டு காதலிகள் என ஐந்தாவதாக பள்ளி மாணவியை கடத்தி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த காமுகன் ஸ்டீபன். இவன் தனது பத்தாம் வகுப்பு பயின்று வந்த மகளை கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில், பணகுடி கலந்தபனைபுதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஸ்டீபன் என்பவன், மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. 

இவன் கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்துள்ளான். பின்னர் இவர்களுக்கே தெரியாமல் மேலும் இரண்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தனித் தனியாக குடித்தனம் நடத்தி வந்ததும் அம்பலமானது. 

இந்நிலையில், இவனது காதல் வலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சிக்கிய நிலையில், மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும், மாணவியின் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத சமயத்தில், மாணவியை தனிமையில் சந்தித்து வந்துள்ளான். 

இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், அந்த மாணவியை கடத்திச்சென்று உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் தேடி வந்த நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள மலைப்பகுதியில் மாட்டுப்பண்ணை ஒன்றிற்கு மாணவி அழைத்துச் சொல்லப்பட்டதும், அங்கு மாட்டுச்சாணம் அள்ளி பிழைப்பு நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காவல்துறையினர் காமுகன் ஸ்டீபனை சுற்றி வளைத்து கைது செய்த நிலையில், சிறுமியை மீட்டு உள்ளனர். காமுகன் தற்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறான். மேலும், காமுகனின் பின்புலம் தெரியாமல் படிக்கும் வயதில் ஏற்படும் பருவ வயது காதலை உலகமென நம்பினால், அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பது காமுகன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், அவனின் உண்மை தெரியும் போது ஊசியால் இதயத்தை குத்தியது போல வேதனையை தரும் என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Panakudi Culprit Stefan arrest by Police Kidnapping and sexual abuse child girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->