''மக்களுக்கும் முதல்வருக்குமான அன்பு பிரிக்க முடியாதவை; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தியை பின்பற்ற வேண்டிய தேவை இல்லை''; அமைச்சர் டி.கே.பிரபு..!
Minister DK Prabhu states that there is no need for the CM Vijay to follow the strategy of the late former CM Jayalalithaa
''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தியை பின்பற்ற வேண்டிய தேவை முதல்வருக்கு இல்லை. அவர் எப்போதும் மக்களின் அன்பை பெற்றவர்.'' என கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உதவி மையத்தை அமைச்சர் டி.கே.பிரபு திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது; மக்களுக்கும் முதல்வருக்குமான அன்பு பிரிக்க முடியாதவை. தமிழக மக்களும், முதல்வரும் ஒரே குடும்பம் தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தியை பின்பற்ற வேண்டிய தேவை முதல்வருக்கு இல்லை. அவர் எப்போதும் மக்களின் அன்பை பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளில் தான் மணல் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், தற்போது டிராக்டர்களில் கிராவல் மண், மணல் ஏற்றி செல்கின்றனர். இதை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மணல் கடத்தல் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என்றும், மக்களுக்கு மணல் தட்டுப்பாட்டு ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister DK Prabhu states that there is no need for the CM Vijay to follow the strategy of the late former CM Jayalalithaa