திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை; திருமாவளவன் உறுதி..! - Seithipunal
Seithipunal


திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக கூறுவது வதந்தி என்றும், இடைத்தேர்தலில் தான்  போட்டியிடப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூடியதாவது;

அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், குறிப்பாக, அரிசி விலை உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து, என்றும்,  இதைக் கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், விலைவாசி உயர்வுக்கு குறிப்பிட்ட ஆட்சியாளர்கள் மீது மட்டும் குற்றம்சாட்டுவது உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்றும், இதற்கு உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நதிநீர் இணைப்பு என்பது நெடுநாட்களாக செயல்படுத்த தீட்டப்பட்டு வரும் திட்டம். தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முதல்வரை அண்மையில் சந்தித்து நதிகள் இணைப்பு குறித்து பேசியது பயனற்றது என கூறுவது அரசியல் அடிப்படையில் வைக்கப்படும் விமர்சனம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தொகுதி மறுவரையறையை கண்டித்து போராட்டங்களை கையில் எடுத்தது திமுக என்பது மக்கள் அறிந்த விஷயம் என்று குறிப்பிட்டதோடு, இப்போது, நாடாளுமன்றத்தை கூட்டி தொகுதி மறுவரையை மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த காலங்களை போலவே திமுக இந்த முன்னெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடப் போவதாகவும், அவரை எதிர்த்து தவெக கூட்டணியில் நீங்கள் போட்டியிடப் போவதாக கூரப்பப்டுவது குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ''இது வதந்தி, இடைத்தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளேன்'' என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan confirms that he will not contest the Trichy East by election


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->