மீண்டும் ஐபிஎல் மினி ஏலம் இந்தியாவில்; கோவாவில் டிசம்பர் 16-இல் நடைபெறும்; பிசிசிஐ அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது குறித்து  10 ஐபிஎல் அணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று சீசன்களுக்கு வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம், மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி, ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அணிகளுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த ஏலம் தொடர்பான விளக்கக் கூட்டம் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஏலத்தில் தங்கள் அணியை பலப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு அணியும் முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த மூன்று சீசன்களுக்கான ஏலம் துபை, ஜெட்டா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. இதனிடையே மற்றொருபுறம் ட்ரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் பேச்சுவார்த்தையும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL Mini auction to be held in Goa on December 16


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->