மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி மற்றும் 4 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலம், காம்ஜோங் மாவட்டத்தில் குகி இனத்தவர் வசிக்கும் சாசாட் கிராமத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் இன்று சனிக்கிழமை நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலியான நிலையில் 04 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகள் பலமுறை துப்பாக்கி சூடு நடத்திய போது உள்ளூர் ஆயுதக் குழுவினருக்கும் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாலை நேரத்திலும் இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. சாசாட் கிராமத்தின் மீதான தாக்குதலைக் பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு, கண்டித்துள்ளதுடன், அங்கு மத்தியப் படைகளை நிலைநிறுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில்,  சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் கிராமத்தைத் தாக்கியதில், கிராமத் தலைவர் தாங்ஜாஹோ ஹாவ்கிப் (48), கைலுன் ஹாவ்கிப், செய்கோஹோ, ஹெகின் ஹாவ்கிப், செய்பாவோ ஹாவ்கிப் ஆகிய நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி செய்கோஹோ பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மாநிலத்தில் பிப்ரவரி மாதம் முதல் குகி மற்றும் நாகா பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறைச் சம்பவங்களால் டமெங்லாங், காம்ஜோங், உக்ருல், நோனி மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One person killed and 4 others injured in a shooting by suspected militants in Manipur


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->