தனியாளாக ஆற்றை சுத்தம் செய்த இளைஞருக்கு பொதுமக்கள் செய்த காரியம்; குப்பைத் தொட்டியை கூட விட்டுவைக்காத நிலை..?
What the public did for the young man who cleaned the river all by himself Bitu Singh
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு சிங் என்ற சுரேந்திர சிங் சௌத்ரி (20) என்பவர் பிஎஸ்சி படித்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தனியாளாக ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியாரோவில் கோயிலுக்கு அருகில் இருக்கும் அஜ்னர் ஆற்றைச் தனி ஒரு ஆளாக சுத்தம் செய்து பிரபலமானார். இவரின் இந்தச் செயலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாராட்டுகள் குவிந்ததோடு, வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களிலும் பாராட்டுகள் தெரிவித்தன.
ஆனால், கஷ்டப்பட்டு சுத்தம் செய்த அந்த ஆற்றில் பொதுமக்கள் நெகிழி உள்ளிட்ட கழிவுகளை மீண்டும் போடத் தொடங்கினர். இதனால் மனமுடைந்த பிட்டு சிங், மீண்டும் ஆற்றைச் சுத்தம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆற்றில் கழிவுகள் போடப்படுவதைத் தடுப்பதற்காக ஆற்றின் ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே இரு பெரிய குப்பைத் தொட்டிகளை பிட்டு சிங் வைத்துள்ளார். ஆனால், குப்பைத் தொட்டி வைத்த சில நாள்கள் கழித்து, ஆற்றுக்கு அவர் வந்து பார்த்துள்ளார்.
அங்கு குப்பைகள் கொட்டுவதற்காக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அவர் வைத்திருந்த இரு குப்பைத் தொட்டிகளில் ஒன்று திருடுபோயுள்ளது. இதனைக் கண்டு மனமுடைந்த பிட்டு சிங், அதனை வீடியோவாகப் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
குப்பைத் தொட்டி திருடப்பட்டதாகச் சமூக ஊடகத்தில் பிட்டு சிங் வெளியிட்ட பதிவுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆற்றின் அருகே காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தி, ஆற்றில் குப்பை போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆற்றில் குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
What the public did for the young man who cleaned the river all by himself Bitu Singh