சென்னையில் விடாது பெய்யும் அடைமழை: சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட்டம்; குறுகிய நேரத்தில் பாரிமுனையில் 17.5 செ.மீ பதிவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில் தீவிரமடைந்த மழை பாரிமுனை பகுதியில் குறுகிய நேரத்திற்குள் 17.5 சென்டிமீட்டர் அளவுக்கு மிகக் கனமழையாக பதிவாகியுள்ளது.

அத்துடன், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. முன்னதாக நுங்கம்பாக்கம் பகுதியில் 7.5 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. 

இந்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேப்போன்று வடதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த சில மணி நேரங்களுக்குச் சென்னையில் கன மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Relentless heavy rain in Chennai


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->