திருச்செந்தூர் டூ நெல்லை... அரசு பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு!  அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவில் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக இருப்பதால் நாள் தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்கள், விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 

கொரோனா காலத்திற்கு பிறகு திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதால் தற்போது இரவு பகல் என எந்நேரமும் கோவில், கடற்கரை பகுதிகளில்  பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இதே போல் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமான திருச்செந்தூர் - திருநெல்வேலி பேருந்துகளில் தினமும் பயணம் செய்து வருகின்றனர். 

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே போதிய ராயல் வசதி இல்லாததால் வெளியூர் பக்தர்கள் திருநெல்வேலி மார்க்கமாக பேருந்துகளில் அதிக அளவு பயணம் செய்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையேயான அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணமான ரூ. 50 இல் இருந்து திடீரென ரூ. 56 ஆக உயர்த்தி பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

இந்த திடீர் கட்டணம் உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும், அரசு சார்பிலும் எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வியாபாரிகள், பாமர மக்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruchendur Nellai between govt bus fares hike


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->