ஆபாசமாக உன் பொண்டாட்டியின் புகைப்படத்தை வெளியிடுவேன்.. டிக் டாக் காதல் ஜோடி பகீர் மிரட்டல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் - சேலம் சாலை பகுதியில் ஜவுளிக்கடையை வைத்திருப்பவர் பரணீதரன் (வயது 40). பரணியின் கடையில் ஷர்மிளா என்ற 20 வயது பெண்மணி கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், தூத்துக்குடியை சார்ந்த சுரேஷ் என்பவருக்கும், ஷர்மிளாவிற்கும் இடையே டிக் டாக் செயலி மூலமாக தொடர்பு ஏற்பட்டு காதல் மலர்ந்த நிலையில், சில மாதத்திற்கு முன்னதாக இருவரும் திருமணம் செய்துகொண்டு தூத்துக்குடியில் வசித்து வந்துள்ளனர். 

இச்சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தம்பதிகள் இருவரும் ஜவுளிக்கடை உரிமையாளரான பேரணிக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் பரணியின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மாபிங் செய்து இணையதளத்தில் வெளியிடவுள்ளோம் என்றும், இதனை தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.40 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து பரணீதரன் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சுரேஷ் மற்றும் ஷர்மிளாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். டில் இருவரும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஆபாச பட மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. 

இருவரையும் கைது செய்த காவல் துறையினர் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், ஷர்மிளா 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் காரணத்தால் ஜாமினில் விடுதலை செய்து இருக்கின்றனர். மேலும், இவர்களின் பின்னணியில் மோசடி கும்பல் இருக்கிறதா? என்பது தொடர்பான விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tic tok couple treat Namakkal dress shop owner


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->