#திருச்சி | சளிக்காக நெபுலைசர் பயன்படுத்திய சிறுமி பலி - போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal



திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பள்ளி சிறுமி ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

துறையூர் அடுத்த கொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் துர்க்கா ஸ்ரீ. இவர் தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக சிறுமிக்கு சளியும், இருமலும் அதிகம் இருந்ததால் கொப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மெடிக்கலில் சளிக்காக நெபுலைசர் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

பின்னர் மருந்து, மாத்திரைகளை வாங்கி விட்டு வீடு திரும்பிய குமார், நள்ளிரவில் சிறுமிக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு, வீட்டிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார், சிறுமி எப்படி உயர்ந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சளிக்காக நெபுலைசர் பயன்படுத்திய சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thuraiyur littile girl mystery dead


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->