திருப்பத்தூர் அருகே சோகம்... குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி.!
three years old baby died for drowned water in thirupathur
வாணியம்பாடி அருகே குட்டையில் மூழ்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே பெத்தகல்லுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே குட்டை ஒன்று அமைந்திருந்தது. இந்த குட்டையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கி இருந்தது.

இந்த நிலையில், அந்த குட்டையில் அப்பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தை தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
three years old baby died for drowned water in thirupathur