பாம்பன் பால கட்டுமான பணியில் நேர்ந்த கொடூரம் - 3 தொழிலாளர்கள் படுகாயம்.!
three workers injured for crane collapse in bamban
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டிட பணிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் படகுகளில் ஏற்றிச் சென்று கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து தூக்குப்பாலம் பணிகளுக்காக சில இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டது. இந்த பொருட்களை இறக்குவதற்காக கடலுக்குள் சில ஏற்பாடுகள் செய்து கிரேன் ஒன்றை நிலை நிறுத்தி இருந்தனர். இதன் மூலம் தொழிலாளர்கள் கொண்டு வந்த பொருட்களை படகில் இருந்து கிரேன் மூலம் தூக்கினார்கள்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கிரேன் முறிந்து, அதன் ஒரு பகுதி படகு மீது விழுந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த பாம்பன் தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், மற்றும் கிறிஸ்டி, மாரி உள்ளிட்ட மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள் விரைந்து வந்து, தொழிலாளர்களை வேகமாக மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்கள் மூலம் மூன்று பேரையும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
three workers injured for crane collapse in bamban