சென்னையில் கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் மூன்று பேர் கைது.!
Three rowdy arrested for selling ganja in chennai
சென்னையில் கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் சென்னை தண்டையார்பேட்டை சுப்புராயன் தெரு பகுதியில் தியாகராய பூங்கா பின்புறம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் ஆயிரம் ரூபாயை பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தைச் சேர்ந்த விக்கி(27), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் (22), மீஞ்சூரைச் சேர்ந்த பாலாஜி (27) என்பது தெரியவந்தது.
மேலும் ரவுடிகளான இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Three rowdy arrested for selling ganja in chennai