நாகர்கோவிலை உலுக்கியுள்ள கைதி மரணம்: உடற்கூறு ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்; சிறைக் காவலர்கள் மூவர் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


கன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்​கு ​தாமரைகுளம் அருகே நாராயணன்​புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் 33 வயதான சபரிவர்​மன். மாற்றுத்திறனாளியான இவர் அப்​பகு​தி​யில் கடை நடத்தி வந்​துள்ளார். கடந்த 09-ஆம் தேதி மதி​யம் 01.30 மணி​யள​வில் இவரது கடை​யில் தென்​தாமரகுளம் போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

அப்போது அரசால் தடை செய்​யப்​பட்ட குட்கா பொருட்​கள் இவரது கடை​யில் இருந்​த​தாகக் கூறி, போலீசார் சபரிவர்​மனை கைது செய்து நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர். கடந்த 04 நாட்​களாக அவர் விசாரணை கைதி என்ற நிலை​யில் இருந்​துள்​ளார்.

இந்நிலையில் நேற்று அதி​காலை​யில் சபரிவர்​மன் சிறை அறை​யில் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாகக் கூறப்​படு​கிறது. அப்போது போலீ​ஸார் அவரை ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அவரை பரிசோ​தித்​த மருத்துவர்கள் ​சபரிவர்​மன் ஏற்​கெனவே உயி​ரிழந்​துள்ளதாக தெரிவித்துள்ளனர். இத்​தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டதும் அவர்​கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது சபரிவர்​மனை போலீ​ஸார் பலமாக தாக்கியுள்​ள​தாக​வும், அவருக்கு எந்​த​வித நோய் பாதிப்​பும் கிடை​யாது எனவும் உறவினர்​கள் குற்​றம்​ சாட்​டியுள்ளதோடு, மருத்​து​வ​மனை வளாகத்​தில் திரண்டு அவர்​கள் போராட்​டத்தில் ஈடுப்பட்டனர்.  போராட்​டத்​தில் ஈடு​பட்ட​வர்​களிடம் எஸ்​.பி. ஸ்டா​லின் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதை அடுத்​து, போராட்​டம் கைவிடப்​பட்​டது.

இந்த பதற்றமான சூழலில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடற்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்ற நிலையில், அதன் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கை, கால்கள், நெஞ்சு, தலை, கழுத்தின் பின் பகுதியில் காயமும், வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் கை, கால்கள் கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளமும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சிறையில் விசாரணை கைது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three prison guards arrested in connection with death of prisoner in court custody


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->