விருதுநகரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.! 
                                    
                                   Three persons arrested for cannabis smugglers in virudhunagar 
 
                                            விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல்துறையினர் ராஜபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேஷ்குமார் என்பவரை விசாரணை செய்ததில், 2 கிலோ கஞ்சா கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் வெங்கடேஷ்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், ராஜபாளையத்தை சேர்ந்த சந்தனம் மற்றும் கோட்டை ஊரை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் அப்பகுதியில் கஞ்சா விற்பதும் தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, கார், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
                                     
                       English Summary
                       Three persons arrested for cannabis smugglers in virudhunagar