ஒரே நாளில் 3 கொலை - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.!!
three peoples murder in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள, சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலு-புவனேஷ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது.
இந்த நிலையில், பாலுவின் மனைவி புவனேஸ்வரிக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக புவனேஸ்வரி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த பாலு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதன் படி பாலு வழக்கம் போல் நேற்று இரவு மது அருந்திவிட்டு புதுப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மனைவியிடம் தகராறு செய்தார். இதனை பாலுவின் மாமியார் பாரதி தட்டி கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த பாலு தான் வைத்திருந்த கத்தியால் அவருடைய மாமியாரை சராமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பாலு மனைவியின் பிரிவுக்கு காரணமான விஜயையும் வெட்டிக்கொலை செய்ய வேண்டும் என்று அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு விஜய் இல்லாததால் அவரது தந்தை மற்றும் தாயை பாலு இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலுவை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
three peoples murder in ranipet