3 சான்றிதழ்களுக்கு 36 ஆயிரம் - கையும் களவுமாக சிக்கிய நகராட்சி பெண் கமிஷனர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பெருங்குடியை சேர்ந்த ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளரான முனுசாமி என்பவருக்கு குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 நிலங்கள் சொந்தமாக உள்ளது. அந்த காலி நிலங்களில் வீடு கட்டுவதற்காக முனுசாமி நிலம் வரன்முறை பெறுவதற்காக குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார்.

அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சான்றிதழை வழங்க ஒரு வீட்டுமனை வரன்முறைக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.36 ஆயிரம் லஞ்சமாக தரும்படி குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கேட்டனர். இதைக்கேட்டு அதிர்ந்து போன முனுசாமி, ஒரு நிலம் வரன்முறைக்கு ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் தருவதாக பேசி முடித்துள்ளார்.

இருப்பினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத முனுசாமி, சம்பவம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் படி லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை முனுசாமியிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அதன் படி முனுசாமியும், நேற்று பணத்துடன் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அதிகாரிகள் 3 வீட்டுமனை வரன்முறைகளுக்கு ரூ.36 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே நிலம் வரன்முறைப்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுக்கப்படும் என்று கறாராக பேசினர். இதையடுத்து முனுசாமி ரூ.24 ஆயிரம் பெற்றுக்கொண்டு 2 வீட்டுமனைகளுக்கான வரன்முறை சான்றிதழ் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு லஞ்ச பணத்தை அலுவலக உதவியாளர் சாம்சனிடம் கொடுத்த்துள்ளார்.

அதனை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்துச் சென்று அலுவலக உதவியாளர் சாம்சனை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கூறியதன் பேரிலேயே தான் லஞ்ச பணத்தை வாங்கியதாக தெரிவித்தார். 

இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை தனி அறையில் வைத்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைதான 3 பேரின் வீடுகளுக்கு சென்று சோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three officers arrested for bribe in chennai kundrathur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->