சிவகங்கையில் திருமணமான பெண் காவலரை காதலனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 03 பேர் கைது..!
Three men arrested for the gang rape of a married policewoman in Sivaganga
சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுள்ள திருமணமான பெண் காவலர் ஒருவர், திருப்புவனம் அருகே தூதை பகுதியைச் சேர்ந்த 28 வயதான லாரி ஓட்டுநர் ராபின் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ராபின் அந்த பெண் காவலரை சிவகங்கை அருகே காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு ராபினின் நண்பர்களான சித்தாலங்குடியைச் சேர்ந்த மகாராஜா (25), ஹரிஸ் (21) ஆகியோர் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்து பெண் காவலரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் காவலர், காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சிவகங்கை நகர் போலீஸார் அந்த பெண் காவலரை மீட்ட்டுள்ளதோடு, தப்பி ஓட முயன்ற ராபின், மகாராஜா, ஹரிஸ் ஆகியோரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், டிஎஸ்பி அமல அட்வின் ஆகியோர் விசாரணை நடத்தியா நிலையில், பின்னர் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து ராபின் உள்ளிட்ட 03 பேரையும் கைது செய்துள்ளனர்.
English Summary
Three men arrested for the gang rape of a married policewoman in Sivaganga