சென்னை: நள்ளிரவில் மருத்துவரிடம் வழிப்பறி..மூவர் கைது..!
Three arrested in Chennai scam
மருத்துவரிடம் வழிபறியில் ஈடுப்பட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையை வானகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அந்த பகுதியில் மருத்துவரராக பணியாற்றி வருகிறார். பணி முடித்து அவர் இரவில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில்., வழக்கம் போல நேற்றிரவு பணி முடித்து அவர் வீடு திரும்பிய போது மதுரவாயல் அருகே அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் தரமறுத்துள்ளார்.
இதனால், அவரை கத்தியால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Three arrested in Chennai scam