கன்னியாகுமாரி || திருவாதிரையை முன்னிட்டு குகநாதீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்   - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

அதேபோல், இந்த ஆண்டு புரட்டாசி மாதத்திற்கான திருவாதிரை நட்சத்திரம் நேற்று வந்த நிலையில், குகநாதீஸ்வரருக்கு 1008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, அதிகாலை 6.30 மணிக்கு கணபதி ஹோமமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1008 சங்குகளை சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை செய்யப்பட்டு குகநாதீஸ்வர பெருமானுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. 

அதன் பிறகு, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12.30 மணிக்கு வாகன பவனி உள்ளிட்டவையும் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளித்து பக்தர்களுக்கு அறுப்பளித்து, மேளச்சத்தம் முழங்க கோவிலை வலம் வந்தனர். 

இவ்விழவிற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thousand eigt sangabishegam in kukanatheeshvarar temple


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->