அம்மா விளையாட செல்போன் தரல... 13 வயது சிறுவனின் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


பிரீ பையர் விளையாட தாயின் ஸ்மார்ட்போன் கிடைக்காத விரக்தியில், ஆறாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வரும் நிலையில், இவருக்கு 16 வயதுடைய மதன் என்ற மகனும், 13 வயதுடைய பாலகுரு என்ற மகனும் இருக்கின்றனர். 

இளையவனான பாலகுரு தூத்துக்குடியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இருவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தாயின் செல்போனில் இணைய வகுப்புகளில் கலந்துகொண்டு படித்து வந்துள்ளனர். அலைபேசி வழியாக பப்ஜி விளையாட்டிற்கும் அறிமுகமான நிலையில், அது தடை செய்யப்பட்ட பின்னர் பிரீ பையர் விளையாட்டையும் விளையாடி வந்துள்ளனர். 

செல்போனுக்கு இருவரும் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து இருந்ததால், அவரது தாய் ஜோதிமணி மகன்கள் இருவரிடமிருந்தும் செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். மேலும், அலைபேசியில் வகுப்புகள் படித்த நேரம் போக, செல்போனை வாங்கி வைத்து இருந்துள்ளார். இந்நிலையில், இன்று தந்தை பணிக்கு சென்றுவிட, அண்ணன் பள்ளிக்கு சென்றுவிட அலைபேசியில் ப்ரீ பயர் விளையாடலாம் என்ற முனைப்பில் பாலகுரு இருந்துள்ளார். 

ஆனால், இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தாய் வெளியூருக்கு சென்ற போது, கையிலேயே அலைபேசியையும் எடுத்து சென்றுள்ளார். இதனால் கடுமையான மன விரக்திக்கு உள்ளாகிய பாலகுரு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வெளியூருக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய தாய், தனது மகள் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளார். 

இதனையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த விளாத்திகுளம் காவல்துறையினர், பாலகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ப்ரீ பயர் விளையாட்டிற்காக தமிழகத்தில் அரங்கேறியுள்ள இரண்டாவது மரணமாக இது இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Vilathikulam Student BalaGuru Suicide due to Free Fire Game


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal