தூத்துக்குடி சிப்காட் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள தனியார் வெளிநாடு துணி ஏற்றுமதி கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது மளமளவென பரவிய நிலையில், கிட்டங்கி முழுவதும் தீ பரவ தொடங்கியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உடனடியாக தீயை கட்டுக்குள் வைக்கும் பணியில் அதிகாரிகள் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள கிட்டங்கியை பொறுத்த வரையில், ஒரு கிட்டங்கிக்கும் மற்றொரு கிட்டங்கிக்கும் குறைந்தது 250 மீட்டர் தூரம் உள்ளதால், மற்ற கிட்டங்கிக்கு தீ பரவ வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sipcot Export Industry Goodes down Fire Accident 9 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal