சிங்கம் சீன் போட்ட இடத்தில் சிதைக்கப்பட்ட காதல் ஜோடிகள்.. பணம்பறிப்பு கும்பலின் அட்டூழியங்கள்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி - நெல்லை செல்லும் வழியில், ரெட்டியார்பட்டி பகுதியில் இரட்டைமலை பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சிங்கம் படத்தின் படப்பிடிப்பிற்கு பின்னர் மிகவும் ஃபேமஸ் ஆகியது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், அந்த இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவு செய்து தற்போது தற்காலிக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் அங்கு காதலர்கள் அவ்வப்போது தனிமையில் சந்திக்கும் வேளையில், காதல் ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டி நகை மற்றும் பணம் பறிக்கும் செயலும், சில காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய கொடூரமும் அரங்கேறி வந்துள்ளது. 

தற்போது ஊரடங்கை பயன்படுத்தி தனிமையில் காதல் ஜோடி சந்தித்து வந்த நிலையில், இந்த காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டிய ரவுடி கும்பல் இணையதளங்களில் வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களில் மட்டுமே இது போன்ற 10 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த கும்பலிடம் சிக்கும் பெரும்பாலானோர் இளம் வயதுள்ள காதல் ஜோடிகள் என்பதால், இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர். மேலும், இதுபோன்ற விஷயங்களை அறிந்த காவல் துறையினரும் கண்டுகொள்ளாது இருந்து வந்துள்ளனர். 

தற்போது காதல் ஜோடியொன்று காமுக கும்பலின் பிடியில் சிக்கி பணம் மற்றும் நகை, அலைபேசியை இழந்த நிலையில், இந்த வீடியோ காட்சிகளை கொள்ளை கும்பல் இணையத்தில் பதிவு செய்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த குற்றத்தில் ஈடுபட்ட முள்ளீர் பள்ளத்தை சார்ந்த முத்துகுமார் என்ற கொடூரனை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவனது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர். மேலும், காதல் ஜோடிகள் பாதுகாப்பற்ற இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும், அவ்வாறு செல்லும் பட்சத்தில் தங்களால் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்தபட்ச திறமையாவது இருக்க வேண்டும் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Couple robbery police arrest culprits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->