சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை.. மானத்தை காக்க தீக்குளித்த சோகம்.. தூத்துக்குடியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.. இவர் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், இதே பகுதியை சார்ந்த சரவணன், வேலுசாமி, குகன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் சம்பவத்தன்று சிறுமியின் இல்லத்திற்கு வந்துள்ளனர்.

சிறுமியின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த காமுகன்கள் சிறுமியை தங்களின் ஆசைக்கு இணங்க கூறி கத்திய வைத்து மிரட்டியுள்ளனர். மேலும், தங்களின் ஆசைக்கு இணங்காத பட்சத்தில் குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்கள்.

இதனால் பயந்துபோன சிறுமி தனது மானத்தை காக்கும் பொருட்டு, தனக்கு தானே தீவைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும், உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து சூடு தாங்க இயலாது அலறியுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், சிறுமியின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் 20 விழுக்காடு தீக்காயம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் ஆபத்தான அளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

சிறுமி உயிருக்கு அப்பதான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், இது குறித்து அங்குள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi child sexual torture by gang police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal