இதுதான் விஜய் ஆட்டம்! செங்கோட்டையனால் உயரும் மேற்கு மண்டல தவெக ஓட்டு.. அதிமுகக்கு மேற்கு மண்டலத்தில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் நீண்ட காலம் முக்கிய தலைவராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் திடீரென தவெக-வில் சேர்ந்தது, தமிழக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் வேதனையும், கண்கூட்டிய காரணங்களையும் பற்றி பத்திரிகையாளர் மணி விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை மெல்லமெல்ல ஓரம் கட்டும் செயல்களை ஆரம்பித்திருந்தார். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனின் விசுவாசிகள் நீக்கப்பட்டு, எடப்பாடி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டது, அவருக்கு மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் அவருக்கு சீட் கூட கிடைக்காது என்ற அச்சமும், போட்டியிட்டால் கூட திட்டமிட்ட தோல்வி ஏற்படுத்தப்படும் என்ற பயமும் அதிகரித்த நிலையில், எஸ்.பி. வேலுமணியின் செல்வாக்கும் ஈரோடு பகுதியில் அதிகரித்தது. இந்த எல்லாம் சேர்ந்து, செங்கோட்டையனை அதிமுக விடுவிக்காத சூழ்நிலைக்கு தள்ளியதாக மணி கூறுகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கோட்டையன் வெளிப்படையாகப் பேசி, தனிப்பட்ட முறையில் அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறியதும், அவரின் மன வேதனையை வெளிப்படுத்தியதாகவும் மணி குறிப்பிட்டார். முதன்முறையாக இவ்வளவு திறந்த வெளியில் பேசும் நிலைக்கு அவர் தள்ளப்படுவது, அதிமுக உள் நிலை அமைப்பின் பிரச்சினைகளை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, கட்சிக்குப் பெரிய அளவில் “பேஸ் லிப்ட்” என்று மணி கூறுகிறார். அவரின் 50 ஆண்டு அரசியல் அனுபவம், குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு, தவெக-க்கு மிகப்பெரிய பலனாக மாறக்கூடும். கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக வாக்கு அடிப்படையில் சிதைவு ஏற்பட்டால், அது நேரடியாக பழனிசாமிக்கு பிரதான சவாலாக அமையும்.

மேலும், செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, “அதிமுகவின் மேற்கு மண்டல வாக்குகள் விஜய் பக்கம் போய்விட்டதால் கூட்டணிக் கணக்கு பலன் தராது” என்று ரிப்போர்ட் கொடுத்ததாகவும் மணி கூறினார். இது எவ்வளவு உண்மை என்றாலும், செங்கோட்டையனுக்கு கள நிலைமை பற்றிய புரிதல் ஆழமாக உள்ளது என்பதற்கான சான்று எனவும் அவர் விளக்கினார்.

“விஜய்யால் இப்போது முழு ஆட்சியையே பிடிக்க முடியாது. ஆனால் ஆட்டத்தை கலைக்கக்கூடிய சக்தியாக (Disruptor) அவர் உருவாகிறார். இதனால் தமிழ்நாட்டில் ‘தொங்கு சட்டமன்றம்’ உருவாகும் வாய்ப்பு உள்ளது” என மணியின் கூற்று அரசியல் வட்டாரங்களை சிந்திக்க வைத்துள்ளது.

முடிவில்,செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தது, ஆயிரம் வார்த்தைகளால் எழுதப்படும் அரசியல் பகுப்பாய்வை விட, ஒரு புகைப்படத்திலேயே தவெகக்கு மிகப்பெரிய ஊடக கவனத்தை பெற்றுத் தந்துவிட்டது என்பது அரசியல் தரப்பில் ஒருமித்த கருத்தாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is Vijay game Sengottaiyan increase in the Western Zone Thaveka vote A shock for AIADMK in the Western Zone


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->