சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு தொடரும் 'ஆரஞ்சு அலர்ட்'!
Orange alert Chennai and 6 districts today tamilnadu imd
'டிட்வா' புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால், கடந்த 48 மணி நேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் (டிச. 3) 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கையை' விடுத்துள்ளது.
இன்றைய மழை எச்சரிக்கை
'ஆரஞ்சு அலர்ட்' (மிகக் கனமழை):
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை.
'மஞ்சள் அலர்ட்' (கனமழை):
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், அரியலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (டிச. 4) கனமழை: கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
English Summary
Orange alert Chennai and 6 districts today tamilnadu imd