கிறிஸ்துமஸ் -புத்தாண்டு பரிசு! நாகர்கோவில்-கோவா இடையே சூப்பர் ஸ்பெஷல் ரெயில் சேவை அறிவிப்பு...!
Christmas New Year gift Super special train service announced between Nagercoil goa
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாவது,"வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலத்தில் பயணிகள் நெரிசல் அதிகரிக்கும் நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் நாகர்கோவில் – மட்கான் (கோவா) இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

நாகர்கோவில் → மட்கான் (ரெயில் எண் 06083)
புறப்படும் தேதிகள்: டிசம்பர் 23, 30, ஜனவரி 6
புறப்படும் நேரம்: முற்பகல் 11.40
சென்றடையும் நேரம்: அடுத்த நாள் காலை 8.50
பயணிகளின் விழாக்கால தேவைக்காக சிறப்பு வசதிகளுடன் இயக்கம்.
மட்கான் → நாகர்கோவில் (ரெயில் எண் 06084)
புறப்படும் தேதிகள்: டிசம்பர் 24, 31, ஜனவரி 7
புறப்படும் நேரம்: முற்பகல் 10.15
சென்றடையும் நேரம்: அடுத்த நாள் காலை 11.00
முன்பதிவு ஆரம்பம்:
நாளை காலை 8.00 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
உள்நாட்டு சுற்றுலா மற்றும் கோவா விடுமுறை பயணிகளுக்கு இது சிறந்த வாய்ப்பு என ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
Christmas New Year gift Super special train service announced between Nagercoil goa