திருவாரூர்: மோட்டார் வாகன நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி கைது!
Thiruvarur Police arrest forgery case
திருவாரூர் அருகே மோட்டார் வாகன நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட கிளை பொறுப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில், திருவாரூர்-நாகை பைபாஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் அபி & அபி மோட்டார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில், கிளை பொறுப்பாளர் மற்றும் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்த குடவாசல் தாலுக்கா, சேங்காலிபுரம் ரோடு, பெருங்குடி தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணகுமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சரவணகுமார் வாடிக்கையாளர்கள் 47 நபர்களிடம் வண்டி விற்பானை செய்த பணத்தில் கம்பெனி ரசீதில் ஒருதொகையும், நிறுவன கணக்கு புத்தக ரசீதில் மாறுபட்ட தொகையை பதிவு செய்து ரூ.21,74,090/- கையாடல் செய்து, அதில் ரூ.2,26,000/- திரும்ப செலுத்தியும், மீதத்தொகை ரூ.19,48,090/ - திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு பணத்தை கையாடல் செய்த நபரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்.
மேலும், பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பெற்று மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, திருவாரூர் நார்த்தாங்குடி பிரிவு சாலையில் அதிக விபத்து நடைபெறுவது குறித்து ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், விபத்தை தடுக்க அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள், சமிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலையத்தை தமிழக முதல்வர் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
English Summary
Thiruvarur Police arrest forgery case