போலி பைப் லைனா.? வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது அதிரடி வழக்கு.!
thiruvannamalai pipe line video youngster case filled
திருவண்ணாமலை பகுதியில் குடிநீர் திட்ட பணிகளின் கீழ் போலி பைப்லைன் பதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு இளைஞர் வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே இந்திரவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கின்ற பணியானது நடந்து வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்த பணியில் போலியாக பைப் லைன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டி ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அப்பகுதியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது, ஊராட்சியில் 15வது நிதி குழு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் இந்த பணியை தடுக்கின்ற வகையில் இளைஞர் அவதூறாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்றும் இதன் பேரில் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
thiruvannamalai pipe line video youngster case filled