தங்கள் கடமையை செய்யாதவர்களை பெண் கல்வி சுட்டெரிக்கட்டும் - ஜி.வி பிரகாஷ்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கல்லூரியின் பெண்கள் கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இந்த கல்லூரியில் சுமார் 8000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். காலை, மதியம் என இரண்டு 2 முறை சுழற்சி அடிப்படையில் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்ததை கண்டு அலறியடித்துக்கொண்டு மாணவிகள் வெளியே ஓடிவந்துள்ளனர்.

மேலும், கழிவறையில் பாம்புகள் இருந்ததை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவை மாணவர்கள் பதிவிட இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.

இந்நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ், "தங்கள் கடமையை செய்யாதவர்களை பெண் கல்வி சுட்டெரிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai College Snake issue GV Prakash statement


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->