7 தமிழர் விடுதலை விவகாரத்தில் திமுகவின் அப்பட்டமான நாடகம்.. சல்லிசல்லியாக உடைத்து நொறுக்கிய தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


7 பேர் விடுதலை விவகாரத்தில், கடந்த 2000 ஆம் வருடம் சட்டப்பேரவையில் நீதிமன்றத்தின் தண்டனை அறிவிப்பை வரவேற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இன்று திமுகவினர் கபட நாடகம் ஆடுகிறார்கள் என தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் மக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதன்போது, அவர் பேசியதாவது, " கடந்த 10 வருடமாக திமுக ஆட்சியில் இல்லை என்பதால், மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

இந்தியளவில் பொய் பேசும் ஒரே அரசியல்வாதி மு.க. ஸ்டாலின் தான். பொய் சொல்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். அதிமுக தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, திருமண திட்டத்தின் கீழ் தாலி தங்கம் என்று பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. 

நடுநிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகளவு கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மாநிலம் வளமாகவும், அமைதியாகவும் இருக்க கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உதவி செய்கிறது. செல்லும் இடமெல்லாம் பொய்யாக மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். 

7 பேர் விடுதலை குறித்து திமுக அப்பட்டமாக நாடகம் ஆடி வருகிறது. 7 பேருக்கு பரோல் கொடுத்தது நான் (முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி) தான். திமுகவின் ஆட்சியில் கருணை மனு கொடுத்ததும் பலனில்லை. அலட்சியப்படுத்தினார்கள். கடந்த 2000 ஆம் வருடத்தில் 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் தண்டனை அறிவிப்பை ஏற்றுக்கொள்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றியது திமுகவினர். இன்று கபடநாடகம் ஆடுகிறார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Minjur CM Edappadi Palanisamy Election Campaign 7 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal