நூதன முறையில் காதலியை கொடூர கொலை செய்த பயங்கரம்.. நாடக காதலன் குறித்து பகீர் பின்னணி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஆர்.கே பேட்டை ஆதிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலை மறைத்து, காவல்துறையினருக்கு தெரியாமல் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார். 

இந்நிலையில், தனது மகள் பயன்படுத்தி அலைபேசியை எடுத்து பார்க்கையில், வாட்ஸ் அப்பில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அனுப்பிய குரல் பதிவுகளும், தனது மகள் விஷம் குடிக்கும் வீடியோவும் இருந்துள்ளது. இந்த பதிவில் வாட்ஸ்அப் மூலம் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதால் மாணவி உயிர் மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து தனது மகளின் மரணத்திற்கு காரணமான தீரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, மகள் தற்கொலை மறைத்து உடலை அடக்கம் செய்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலுவை சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வேலு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், பள்ளி மாணவி தற்கொலை பின்னணியில் இருந்த காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. 

மகள் ஆன்லைனில் கல்வி கற்க வாங்கி கொடுத்த அலைபேசியில், அவருடன் படித்து வந்த மாணவர் பேசி வந்துள்ளார். ஆனால், அந்த மாணவன் தீரன் என்ற நபரின் அலைபேசியில் இருந்து பேசி வந்துள்ளான். இதனையடுத்து சிறுமியை மயக்க நினைத்த கொடூரன், முதலில் மாணவனை போல பேசி, பின்னாளில் அவரை தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளான். 

இதனைத்தொடர்ந்து, பின்னர் சிறுமியை மிரட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலையில், தீரனின் பேச்சில் மயங்கிய சிறுமி அவன் சொன்னதெல்லாம் செய்யுமளவிற்கு மாறியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காமுகன், தந்தைக்கு தெரியாமல் பணம் எடுத்துக் கொடுக்க வைத்துள்ளான். இதன் பின்னர் வேறொரு பெண் கிடைத்தால், மாணவியை கைவிட்டுச் செல்ல நினைத்த நிலையில், உண்மை காதலை நிரூபிக்க தயாரா? என்றும், காதலுக்காக உயிரை விடுவேன் என்று சிறுமியை வாயாலேயே சொல்ல வைத்துள்ளான். 

பின்னர் காதலை உறுதி செய்ய பூச்சி மருந்து குடித்ததும் தெரியவந்துள்ளது. மேலும், தீரன் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து, 50 லட்சத்திற்கும் மேல் பெற்றுக்கொண்டு தமிழகத்துக்கு தப்பி வந்த நிலையில், இதனைப்போன்று மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு என பல பகுதிகளைச் சார்ந்த பெண்களையும் முகநூலில் வீழ்த்தி, லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruthani Drama Love girl suicide Police Investigation


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal