மாணவிக்கு கொடூர ஆசிரியர் அனுப்பிய மெசேஜ்.! பள்ளி மணிவிக்கு குவியும் பாராட்டு.! பொண்ணுன்னா இப்படி இருக்கணும்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே பள்ளி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அருகே அரசு பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வரும் அசோக்குமார் என்பவர், அந்த பள்ளியில் பயின்ற  பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

தமிழ் ஆசிரியர் அசோக்குமார் ஆபாச குறுந்தகவல் அனுப்பியும்., ஆபாசமாக பேசுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவி, தனது பெற்றோரிடம் இதுகுறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் 1098 என்ற எண்ணின் மூலம் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தமிழ் ஆசிரியர் அசோக்குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும் தமிழாசிரியர் அசோக்குமார் அந்த பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசியதும், குறுந்தகவல் அனுப்பியதும் போலீசாரின் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

பள்ளி மாணவி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து பெற்றோரிடம் தெரிவித்தது போல், தமிழகத்தில் உள்ள மாணவிகளும் தங்களது பெற்றோரிடம் வெளிப்படையாக இதுபோல் சொல்ல வேண்டும்.

மேலும் பெற்றோர்களும் தங்களது பெண் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலியல் தொந்தரவுகளை சொல்லுமளவிற்கு, பெண் பிள்ளைகளிடம் அன்பாகவும், பாசத்தோடும் பேசவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUPUR SCHOOL GIRL COMPLAINT TO 1098


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal