திருப்பூரில் நடுரோட்டில் காதலி தீக்குளிப்பு.. கள்ளக்காதலன் பரிதவிப்பு.?! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த தெய்வானைக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் திருப்பூரில் உள்ள கேவி ஆர் நகர் பகுதியில் அவர்கள் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் தெய்வானை பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது அங்கே தன்னுடன் பணிபுரிந்த ஒரு நபருடன் தெய்வானைக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. சில நாட்களுக்கு பின்னர் அந்த நபர் தெய்வானையை விட்டு விலக எத்தனித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தெய்வானை அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எனவே தெய்வானை இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் தெய்வானை தங்கள் இருவரையும் சேர்த்து வைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அதிர்ச்சி அடைந்த அவர் நடுரோட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி உடலை தீ வைத்து கொண்டு தற்கொலை செய்துள்ளார். தற்போது இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruppur Women death By fire on road


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal