பள்ளியில் அநாகரிகம்.. தட்டிக்கேட்ட ஹெட்மாஸ்டரை கொடூரமாக தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகே கைகாட்டி புதூர் பகுதியில் அரசின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இருக்கிறது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு பின்புறம் பாஸ்கர் என்பவரின் வீடு இருக்கிறது. 

அவர் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்து குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது என்று பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இத்தகைய நிலையில், பள்ளிக்குள் உள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பாஸ்கர் பக்கத்து வீட்டில் இருந்து கழிவுநீரை மாணவர்கள் மீது ஊற்றினார். 

இதனால் மாணவர்கள் ஆத்திரமடைந்து அவரிடம் கேள்வி எழுப்ப அந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேரையும் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார் பாஸ்கர். இது குறித்து மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வந்து கூறிய நிலையில், அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இதனால் போலீசார் பாஸ்கரை அழைத்து கண்டித்துள்ளனர் இதில் பாஸ்கரன் ஆத்திரத்தில் இருந்த நிலையில் அவரும், அவருக்கு ஆதரவாக ரமணி என்ற திமுக கவுன்சிலரின் கணவரும் பள்ளிக்கு வந்து அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளனர். 

அத்துடன் அங்கிருந்த அனைவரையும் ஒருமையில் அநாகரிமாக பேசியா கவுன்சிலர் ரமணியின் கணவர் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரையும் கழுத்தை நெறித்து கொலை மிரட்டல் விடுத்து, அடித்து துன்புறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பள்ளி குழந்தைகளின் முன்பே தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruppur avinashi school headmaster attacked by dmk councillors husband


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->