தலைமை ஆசிரியை செய்த வேலை., கண்ணீருடன் அழுதுகொண்டே புகார் அளித்த மாணவிகள்.! - Seithipunal
Seithipunal


சாதிப் பெயரால் திட்டியும், தகப்பன் இல்லாத பிள்ளை தானே நீ என்று கடுமையான வார்த்தைகளால் தலைமை ஆசிரியை ஒருவர் பேசி இருப்பது, தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், இடுவாய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சாதிப்பெயரை சொல்லி அழைப்பதும், கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாக , மாணவ - மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அந்த பள்ளிக்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மாணவர்களிடம் பேசினார். அப்போது மாணவ-மாணவியர்கள் அளித்த குற்றச்சாட்டுகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கழிவறையை கழுவ சொல்லி கட்டாயப்படுத்துவது., திருமணம் செய்து குழந்தை பெறாமல் பள்ளிக்கு ஏன் வருகிறீர்கள் என்ற கடுமையான வார்த்தைகள் கொண்டு திட்டுவதாகவும் வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

மேலும், ஒரு மாணவர் தெரிவிக்கையில், தான் பள்ளிக்கு கால தாமதமாக வந்ததால், அப்பன் இல்லாத மகனே., ஏன் இப்படி எல்லாம் கால தாமதமாக வருகிறாய்., என்று தலைமை ஆசிரியை திட்டியதாக தெரிவித்தார்.

முதலில் மாணவ மாணவிகளின் குற்றச்சாட்டுக்களை மறுத்த தலைமை ஆசிரியை கீதா, பின்னர் இனிமேல் இவ்வாறு நடக்காது என்று உறுதி அளித்தார். இதனை அடுத்து அவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தலைமை  ஆசிரியையின் இந்த வரைமுறையற்ற பேச்சு பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupor iduvai govt school


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->