பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் அடுத்தகட்ட முடிவு - திருமாவளவன் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் இன்று மாலை பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, 

தி.மு.க கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதி பங்கீடு முடிக்க தி.மு.க தலைமை ஆலோசனை நடத்துகிறது. 

தனிப்பட்ட முறையில் கட்சி பலம் எவ்வளவு முக்கியமோ அதைவிட கூட்டணியும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை தோற்கடிக்க முடியும். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தனியான சின்னம் இல்லை. 

புதியதாக ஒரு சின்னத்தை நினைவூட்டி வழிகாட்டுவது கடினம். அதை தவிர்ப்பதற்கு தான் தி.மு.க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் தி.மு.கவுக்கு கிடைத்த வாக்கு வங்கியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும். 

எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி என்னும் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்க வேண்டி இருந்தது. கடந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு வங்கி இருந்ததால் பானை சின்னத்திலும் போட்டியிட்டோம். 

அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்த சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு வங்கியை உறுதி செய்தோம். இன்று நடைபெற உள்ள பேச்சு வார்த்தையின் இறுதியில் எந்த சின்னத்தில் நாம் போட்டியிடுவோம் என தெரியவரும். 

தி.மு.கவுடன் சமூக நீதி, மாநில உரிமைகள் என கருத்தியல் ரீதியாக உடன்பாடு உள்ளது. அந்த புள்ளியில் தான் தி.மு.கவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நீடிக்கிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan says symbol decided after talking dmk


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->