பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நிறைவடைந்தது திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.!!
thiruchenthur murugan temple kumbabhishegam finished
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் கோவில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்றது.
அதன் படி நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விண்ணைப் பிளந்த பக்தர்களின் 'அரோகரா' முழக்கத்துடன், மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
thiruchenthur murugan temple kumbabhishegam finished