சுமார் 35 நாட்களில் 10 கொலைகள்; தொழில்​துறையை பாதிக்கும் என அச்சம்; தனிநபர் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


கடந்த 35 நாட்​களில் கோவை மாவட்டத்தல் மட்டும் 10 கொலைகள் நடந்​திருப்​பது பொது​மக்​களிடையே  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்​காநல்​லூரை சேர்ந்​தவர் குரு​நாதன். இவருக்கு சொந்த​மாக பாப்​பம்​பட்டி நந்​தினி நகரில் உள்ள இடத்​தில், தகரக்கொட்​டகை அமைக்​கும் பணியை கடந்த சில நாட்​களாக மேற்​கொண்டு வந்​தார். நேற்று இடத்தை பார்​வை​யிட சென்றபோது, அங்கு சுமார் 40 வயது மதிக்​கத்​தக்க நபர் தலையில் காயம்​பட்ட நிலை​யில் உயி​ரிழந்து கிடந்​தார்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீ​ஸார் சடலத்தை கைப்​பற்றி விசாரணை நடத்துனர். இறந்து கிடந்​தவரின் கையில் ராமேஸ்​வர் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவர் வட மாநிலத்​தவரை போல காணப்பட்ட நிலையில், மர்ம நபர்கள் அவரை கொலை செய்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரிவித்​துள்ளனர்.

கோவை மாநகர் மற்​றும் புறநகர் பகு​தி​களில் சமீபகால​மாக கொலை சம்​பவங்​கள் அதி​கரித்​துள்​ள நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் 

இதுகுறித்து சமூக ஆர்வலர்​கள் கூறுகை​யில், ''கோவை கொலை நகர​மாக மாறுவதை ஏற்க முடி​யாது. கடந்த ஆகஸ்ட் 03-ஆ ம் தேதி பீளமேடு பகுதி​யில் சென்​னையை சேர்ந்த இளைஞர் நவீன் ​(25) கொலை செய்​யப்​பட்​டார்.

அடுத்து, 06-ஆம் தேதி கிணத்​துக்​கடவு பகு​தி​யில் அஸ்​வின் (22) என்ற இளைஞர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்​டு, அதனை இளம் சகோதரர்கள் செல்ஃபி மற்​றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதி​விட்டனர். 

கோவை தனி​யார் கல்​லூரி மாணவர் அமுதன் (19) சகமாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். சுமார் 35 நாட்களில் 10 கொலை​கள் நடந்​திருப்பது அதிர்ச்சி அளிக்​கிறது.'' என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்​துறை​யினர் இது குறித்து கூறும்​போது, கோவை என்​றால் அமைதியான தொழில்​நகரம் என்​பது​தான் அடை​யாளம். அந்த அடை​யாளத்தை இழக்​கும் அளவுக்கு கொலை​கள் நடந்து வரு​வது எதிர்​காலத்​தில் தொழில்​துறையை நிச்​ச​யம் பாதிக்​கும் என்றும், தொழில் நகரத்​தில் தனி​நபர் பாது​காப்பு மிக அவசி​யம் எனவும், அதில் மாநகர் மற்றும் மாவட்ட போலீ​ஸார் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆட்​கள் நடமாட்​டம் குறை​வான பகு​தி​களில், போலீ​ஸார் ரோந்து பணி​களை விரைவுபடுத்​து​வதுடன், வடமாநிலத் தொழி​லா​ளர்​கள் அதி​கம் வாழும் இடங்​களில் அவர்​களது விவரங்​களை நிறுவனங்கள் முழு​மை​யாக பெற்று ஆவணம் செய்து வைத்திருக்க வேண்​டிய அவசி​யத்​தை​யும் இச்​சம்​பவங்​கள் உணர்த்​துகின்​றன. இதற்கு தொழில்​துறை​யினரும் ஒத்​துழைப்பு தரவேண்​டும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There are fears that the industrial sector in Coimbatore will be affected as 10 murders have occurred there in about 35 days


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->